காரணமின்றி கைதுசெய்து வைத் திருக்கும் அரசியல் கைதிகளை உடன டியாக விடுதலைசெய்ய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மைத்திரி ஆட்சி இருக்கும்வரை நீடிக்க அனுமதிக்க முடியும்.” இவ்வாறு தெரி வித்தார் நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரம பாகு கருணாரட்ன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அதி காரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் அமைப்பின் ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத் துத் தெரிவிக்கையிலேயே
அவர் இவ்வாறு கூறினார்.
“”காரணமின்றி கைதுசெய்து வைத்திருப்போரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துவதும் இல்லை. எந்தவொரு விசாரணையும் இல்லை. என்ன காரணத்துக்காக சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர் என்றும் தெரியவில்லை.
தமது உறவுகளின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வடக்கின் மக்களை மகிழ்ச் சிப்படுத்த வேண்டும். எனவே, நாட்டில் நல்லாட்சி நிலவவேண்டு மென்றால் சிறுபான்மைச் சமூகத்தின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.”‡ என்று அவர் குறிப்பிட்டார்.