எம்.ரீ.எம்.பாரிஸ்
மக்கள் நலனை கருத்தில் கொண்டு எமது பிரதேசத்திற்கு நல்லது செய்யவேண்டுமென்ற நோக்கோடு யாரெல்லாம் செயற்படுகின்றார்களே அவா்களுக்கு எனது பூரண ஒத்துழைப்புக்களையயும்,உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என சமுா்த்தி விடமைப்பு பிரதியமைச்சா் அமீா் அலி அவா்கள் அண்மையில் அல்-கிம்மா நிறுவனத்தினால் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தின் ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் கல்குடா அல்-கிம்மா என்ற தன்னார்வ நிறுவனம் எமது மாவட்டத்தில் மட்டுமல்லாது இலங்கையின் பல மாவட்டங்களிலும், மக்கள் நலன் கருதி செயற்பட்டு வருகின்றது என்பது எனக்கு நன்கு தெரியும்.
அவா்கள் பொது நலன் கருதி அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் நாடி செயற்படுகின்ற சந்தர்பங்களில் இறைவனுடைய உதவி எமக்கு என்றும் கிடைக்கும்.
பொது நல செயற்பாடுகளில் நாம் ஈடுபடுகின்ற சந்தர்பங்களில் விமர்சனங்கள் எம்மை தேடி வரும் சவால்கள். விமா்சனங்கள் என்பது நாம் மக்களுக்கு நல்லது செய்யும் காலமெல்லாம் எம்மை தொடர்ந்து வரும். அதற்காக வேண்டி நாம் அமைதியடைந்து எமது பணிகளை விட்டுவிடுவோமென நினைத்து அல்லது மணம் சோர்ந்து விடுவோமேயானால் மக்களுக்காக காத்திரமான சேவைகளைச் செய்கின்ற தலைமைத்துவமாக நாம் செயற்பட முடியாது.
எம்மைப்பற்றி ஒருசிலா் விமர்சிக்கின்றார்கள் அல்லதுசிலா் ஏசிப்பேசுகிறார்கள் என்றால் நாம் ஏதோ எமது மக்களுக்கு நல்லதை அதிகம் அதிகம் செய்கின்றோம் என்ற ஒரே காரணத்திற்காகவே தவிர வேறில்லை.
என்னுடைய பார்வையும் பயணமும் கிம்மாவின் பயணமும் “நான் நினைக்கிறேன் ஒன்றாகவே இருக்கும் என்று.அதனாலேயே கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் எதிர்காலங்களிலும் கூட கிம்மா செய்கின்ற பணியைப் பற்றி விமர்சிப்பதற்கோ அல்லது அதனைப் பற்றி யோசிப்பதற்கோ நான் இஸ்டப்பட்டது கிடையாது. ஏதோ இச் சமூகத்திற்கு அவா்கள் நல்லதைச் செய்கின்றார்கள் தாராளமாக செய்து கொள்ளட்டும்.
இந்தப் பணியை இவா்கள் எமது பிரதேசத்திலே சிறப்பாகச் செய்கின்றார்கள். அதற்காக வேண்டி இப்பிரதேசத்தின் அரசியல் வாதி என்றவகையில் பூரண ஆதரவினை நான் அவா்களுக்கு வழங்குவேன் எனமேலும் தெரிவித்தார்.