2050-இல் உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.இதுதொடர்பாக, அமெரிக்காவின் பீவ் ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்து நடத்திய ஆய்வறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2050-இல் உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 290 கோடியாகவும், முஸ்லிம்கள் 280 கோடியாகவும் இருக்கக்கூடும்.அடுத்த 40 ஆண்டுகளுக்கு, உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள்.
அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களின் வளர்ச்சி விகிதத்தைவிட, முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் அதிகமானதாக இருக்கலாம்.இந்த நிலை தொடர்ந்தால் 2070-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் முதலிடத்தைப் பெறலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.