Breaking
Mon. Nov 25th, 2024

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தின் பிரதான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் ஒரு மாதகாலத்துக்குள் அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன காணி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நேற்று (2015-04-02) ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையினை வழங்கினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஜனாதிபதியிடம்விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஜனாதிபதியின் செயலாளர மற்றும் அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள்,காணி அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருக்கும் காரணிகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் மீள்குடியேறும் மக்களுக்கு ஏற்கனவே காணகள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் தமது தேவைகளுக்காக சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்தி அதனை வழங்குவதற்கு தடைகளை ஏற்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர்,முசலி பிரதேச சபை தவிசாளர் யஹ்யான் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இது தொடர்பில் காணி அமைச்சின் பணிப்பாளர் மற்றும் உதவி செயலாளர்கள் ஆகியோரிடத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டதாவது,ஒரு மாத காலத்துக்குள் முழுமையான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,எனைய மீள்குடியேற்றங்களை வேறுபட்டதொன்று,25 வருடங்களின் பின்னர் இக்குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி.வவுனியா,மன்னார் மாவட்டங்களின் காணி்ப் பிரச்சினை தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது.

Related Post