அரபு நாடுகள் இடையே ஒருங்கிணைந்த ஒரு இராணுவம் உருவாக்க பட வேண்டும் என்பது அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவாகும்
முஸ்லிம்களின் இந்த கோரிக்கை நியாயமானது என்பதை அண்மையில் சவுதி மன்னர் சல்மான் தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததோடு அரபு லீக்கின் பொறுப்பில் உள்ளவர்கள் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு எகிப்தின் ஷரம்சேக் நகரில் நடைபெற்ற அரபுலீக்கின் 26 வது உச்சி மாநாட்டில் அரபு நாடுகளிடையே ஒருங்கிணைந்த இராணுவத்தை உருவாக்குவது என்று கொள்கை அளவில் ஒப்பு கொள்ள பட்டு விரைவில் அதர்கான பணிகள் தொடங்கும் என் அதிகாரபுர்வமாக அறிவிக்க பட்டுள்ளது
அரபு லீக்கின் இந்த இராணுவம் ஈரான் மற்றும் யுதர்களின் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் விதத்தில் வலுவான நிலையில் உருவாக்க படும் என்று அரபு லீக் அறிவித்திருக்கிறது