Breaking
Tue. Nov 26th, 2024

அப்துல்லாஹ்

அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்கும்போதுதான் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்ய முடியுமென்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார்.

கல்குடா தொகுதியின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ‘திவிநெகும திட்டத்தினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இம் மாநாட்டில்  தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசாங்க அதிகாரிகளில் ஒரு சிலர் ஒருபோதும் நேர முகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதனால் அவர்கள் தங்களையும் சேவையை நாடும் பொதுமக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்;கின்றார்கள்.

நாம் அனைவரும் மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நியமிக்கப்பட்டுள்ளோம். அதற்காகவேதான் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளமும் பெறுகின்றோம்.

அதனால் நேர முகாமைத்துவத்தை மதித்து மக்களுக்கான சேவைகளைத் திறம்படச் செய்ய வேண்டும். நமக்காக மக்கள் அல்ல மக்களுக்காகத்தான் நாம் நியமிக்கப்பட்டுள்ளோம் என்ற மன நிலை நம் மத்தியில் சிந்தனையாக வர வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பி. குணரெட்ணம், வாகரை, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான் ஆகிய ஐந்து பிரதேச செயலப் பிரிவுகளைச் சேர்ந்த திவிநெகும தலைமை முகாமையாளர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Post