Breaking
Wed. Oct 30th, 2024

முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் !
ஹைதராபாதில், நேற்றுமுன்தினம் (02-04-2015), கீழே கண்டெடுத்த 25 சவரன் நகை, உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை, ஒரு முஸ்லிம் பெண்மணி காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

மேற்படி பெண், ஆசிப் நகரிலிருந்து ‘ஹகீம் பேட்டை’க்கு சென்றுக் கொண்டிருக்கையில், அனாதையாக கீழே கிடந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள், 2 செல்போன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததைக் கண்டார்.

மொபைல் போன் உதவியுடன், அந்த பையின் உரிமையாளரை அடையாளம் கண்டுக் கொண்டாலும், அவரை காவல்நிலையத்துக்கு வரவழைத்து அப்பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.

உடமைகள் ஒப்படைப்பு நிகழ்ச்சியின்போது, ஆசிப் நகர் மேற்கு டிவிஷன் உதவிக்கமிஷனர், அப்பெண்ணின் நேர்மையை வெகுவாக பாராட்டினார்.

 

Related Post