Breaking
Tue. Nov 26th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார்.

ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த பணிப்புரைக்கு அமையவே யோசித்த ராஜபக்ஷ, இணைத்துகொள்ளப்பட்டுள்ளார். அவருடைய கல்விச்சான்றிதழ்கள் தொடர்பிலான ஆவணங்கள் அவருடைய தனிப்பட்ட கோப்புகளில் இல்லை என்று அறியமுடிகின்றது.

-TM-

Related Post