Breaking
Wed. Oct 30th, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கம் தொடர்பில் இரண்டு வார்த்தையில் கருத்து வெளியிட்டுள்ளார். “அபி பைஹினவா”   என்ற இரண்டு வார்த்தைகளையே ஜனாதிபதி கூறியுள்ளார்.

“நாங்கள் வீழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறோம்” என்பதை பேச்சு வழக்கில் “நாம் கீழிறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    ஆனால் “”நாங்கள் இறங்குவோம்””  என்று கூறுவதற்கும் இவ்வாறு அப்பி பைஹினவா”    என்று சிங்கள  மொழியில் கூறப்படுவதுண்டு.

கடந்த வார இறுதிப்பகுதியில் இடம்பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் எவரும் இதுவரை கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.
இது புதிய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகவே கருதப்படுவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்ட பின்னர்  ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

இவ்வாறான நிலையில் எவ்வாறு அரசாங்கத்தினால் முன்னோக்கி செல்ல முடியும் என்று அனுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால,  எனினும் இதற்கான உரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் பணிப்புரையின் கீழ் செயற்பட்டு வந்தது.

எனினும் நல்லாட்சி  என்ற தமது அரசாங்கத்தின் கீழ் அவ்வாறு செயற்பட முடியாது. எனவேதான் விமர்சனங்கள் எழுகின்றன என்று மைத்திரிபால குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த அனுரகுமார, ஏப்ரல் 21ம் திகதி வரை ஜே.வி.பி அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கும். இந்தக்காலக்கட்டத்தில் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜே.வி.பி தேசிய நிறைவேற்றுசபையில் இருந்து விலகிக்கொள்ளும் என்று  தெரிவித்துள்ளார்.

Related Post