Breaking
Tue. Nov 26th, 2024

இரண்டு மாத கால­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நான் உயி­ருடன் இருக்­கின்­றேனா அல்­லது இறந்து விட்­டேனா என்று கூட எனது கட்­சிக்­கா­ரர்கள் எவரும் கண்டு கொள்­ள­வில்லை, என்னை எட்­டியும் பார்க்­க­வில்லை என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.எம்.காதர் தெரி­வித்தார்.

கண்­டி­யி­லுள்ள அவ­ரது செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த 27 வரு­டங்­க­ளாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து வரு­கின்­ற­போதும் என்னை எவரும் தேடிப்­பார்க்­க­வில்லை தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள அதில் இணைந்து கொண்ட எமது கட்சித் தலை­வர்கள் இன்று எம்மை மறந்து விட்­டனர்.

உடல் நலத்தால் பாதிக்­கப்­பட்டு இரண்டு மாதங்கள் மெள­ன­மாக இருந்த நான் இப்­போது தான் ஊட­கங்­க­ளுக்குக் கூட கதைக்­கின்றேன்.

நாட்டின் நல்­லாட்­சியின் பொருட்டு பிர­தமர் நாளை என்னை அழைத்தால் நான் செல்­லத்­த­யா­ரா­கவே உள்ளேன். மக்­க­ளுக்கு நாட்­டிற்கும் சேவை­யாற்றும் கட்­சி­யுடன் இணைந்து செயல்­ப­டு­வது சாலச்­சி­றந்­தது என்று கரு­து­கின்றேன்.

இதே­போன்று சிறந்த தீர்­மா­னங்­க­ளையும் விரைவில் எடுக்­க­வுள்ளேன். பெளத்­தர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் என்றும் நாட்டில் ஐக்­கி­ய­மா­கவே வாழ்ந்து வந்த போதும் அண்­மைக்­கா­லங்­களில் அதற்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன.

அவ்வாறான தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில் அனை வரும் செயல் படவேண்டும். அனைத்து இனமக்களினதும் சகவாழ்வே இந்நாட்டி ற்கு சிறந்ததாகும் என்றார்

Related Post