நீரிழிவு பாதிக்கப்பட்டவராக நீங்கள் இருந்தால், எதை சாப்பிடுவது, எதை விடுவது என்று குழம்ப வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் எவற்றை சாப்பிட வேண்டும் மற்றும் எவற்றை சாப்பிடக் கூடாது என்று கீழே விரிவாக கொடுத்துள்ளோம்.
சாப்பிட வேண்டியவை
01. வாழ்க்கையின் அமுதம் – தண்ணீர்’. நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் உடலில் தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில், அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் எங்கே சென்றாலும், ஒரு பாட்டில் தண்ணீரை உடன் கொண்டு செல்லுங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவும்.
02. உணவில் காப்ஃபைன் கலந்த பானத்திற்கு பதிலாக மூலிகை தேநீரை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள. நீங்கள் கிரீன் டீ, இஞ்சி டீ அல்லது ஏதாவது ஒரு வகையான மூலிகை டீயை சேர்க்கலாம். இந்த மூலிகை தேநீர் பானங்களை சர்க்கரை இல்லாமல், குறைந்த கலோரிகளையுடைய இனிப்பான்களை கலந்து குடிக்கவும்.
03. கொழுப்பில்லாத நீரிழிவு உணவை சாப்பிடவும். குறைவான கலோரிகளையுடைய நீரிழிவு உணவுகளையே நீங்கள் எப்பொழுதும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
04. காய்கறிகளுக்கு சல்யூட். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் 3 முறை காய்கறிகளை சேர்த்துக் கொண்டால், அது தான் சிறந்த நீரிழிவு நோயாளிகளுக்கான உணவாகும்.
05. வெங்காயம் ஒரு சிறந்த நீரிழிவு உணவாகும். உணவில் பச்சையான வெங்காயங்களை சேர்த்துக் கொள்ளவும். இது உங்களுடைய செரிமாணத்திற்கும் உதவும்.
06. பழங்களையும் உங்கள் நீரிழிவுக்கான உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை சிறிய அளவில் உணவுடன் சாப்பிடுங்கள்.
07. இந்திய ப்ளாக் பெர்ரி அல்லது ஜாமுன் ஒரு சிறந்த நீரிழிவு உணவாகும். உங்களுடைய இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கக் கூடிய இதனை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
08. கரேலா அல்லது பாகற்காய் சிறந்த நீரிழிவு உணவுகளில் ஒன்றாகும். இது இரத்தத்தின் சர்க்கரை அளவை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துவிடும்.
09. ஆளி விதை மற்றும் இலவங்க கரைசலை உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கொழுப்பின் அளவை குறைக்கவும், உடலின் குளுக்கோஸ் அளவை உயர்த்தவும் செய்கின்றன.
10. நீரிழிவு உணவில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்களை சேர்க்க மறந்து விடாதீர்கள். நீரிழிவின் காரணமாக உருவாகும் கிருமிகளை வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அழித்து விடுகின்றன.
சாப்பிடக்கூடாதவை
01. நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான மற்றும் முதன்மையான விஷயம் உணவை தவிர்க்காமல் இருப்பதே. அவ்வாறு செய்தால் உங்களுடைய சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்காது.
02. உங்களுக்கு விருப்பமானவைகளாக சாக்லெட்கள், ஐஸ்-க்ரீம்கள் இருந்தால் உடனே ‘நோ’ சொல்லுங்கள்.
03. அரிசியை தவிர்த்து, நார்ச்சத்து மிக்க உணவினை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
04. வறுத்த உருளைக்கிழங்கு உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக இருந்தாலும் மறுத்து விடவும்.
05. உங்களுடைய நீரிழிவு உணவில் நீங்கள் சேர்க்கும் உப்பின் அளவை குறைக்கவும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வரவும் வாய்ப்புகள் அதிகம்.
06. ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் டீ அல்லது காபி வேண்டாம். இதை விதியாக கடைபிடிக்கவும்.
07. நீங்கள் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் பொரித்த இறைச்சி, முட்டை மற்றும் பிற பண்ணை உற்பத்தி பொருட்களை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.
08. ஆல்கஹால் வேண்டாம். புகைப் பழக்கத்தை விடவும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இவையிரண்டும் மிகவும் மோசமான எதிரிகளாகும்.