இர்ஷாத் றஹ்மத்துல்லா
மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக துணிச்சலுடன் மீள்குடியேற்றத்தை சந்தித்த மக்கள் புதுக்குடியிறுப்பு மக்கள் என பாராட்டு தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணித் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் சில நாட்கள் அரசியல் பதவி இல்லைாமல் இருந்ததால் இந்த மக்களுக்கு கிடைக்கவிருந்த வீடமைப்பு திட்டத்தினையும் திருப்பி அனுப்பிய சம்பவத்தையும் காணமுடிந்ததாகவும் கூறினார்.
மன்னார் மாவட்டத்தில் புதுக்குடியிறுப்பு கிராமத்தில் இடம் பெற்ற அல்-ஹாபிழ் பட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். “மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையின் போது
வன்னி மாவட்ட அரசியல் என்பது தியாகங்களையும்,இழப்புக்களையும் கொண்டதாகும்.
ஏனைய அரசியல் வாதிகளைப் போன்று எனக்கென்ன என்று இருந்தாலோ அல்லது இந்த மக்களுக்கு கொண்டுவருகின்ற அபிவிருத்தி பணிகளை இல்லாமல் செய்யும் வேலைகளை செய்பவர்களுக்கு எதிராக போராட வேண்டிய நிலையே இருக்கின்றது.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது மீள்குடியேற்றத்திறகு வருகின்ற போது எதிர் கொண்ட பிரச்சினைகளை இன்று சிலர் மறந்துள்ளனரா ?
இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் கிடைக்காத ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இருக்கின்றனர்.இந்த மக்களுக்கு நிழல் கொடுக்க எமது அரசியல் பதவிகளை கொண்டு பல நாடுகளுடன் பேசி வீடமைப்பு திட்டங்களை நாங்கள் கொண்டுவருகின்ற போது அதற்கு எதிராக ஒரு கூட்டம் செயற்படுகின்றது.
பாகிஸ்தான் அரசு இந்த வறியப்பட்ட மக்களுக்கு சில வீடுகளை வழங்கிய போதும்,அதனை இங்கு கொணடுவர முடியாத நிலை உள்ளது.
மக்கள் பிரதி நிதிகளாகிய நாங்கள் இந்த திட்டங்களை நல்ல நோக்குடன் செய்கின்ற போது எம்மை பயங்கரவாதிகாளக காண்பிக்கின்றனர். எம்மால் முன்னெடுக்கப்படும் பணிகள் துாய்மையானது என்பதை எமது உள்ளம் சொல்லுகின்றது,அதற்கு அல்லாஹ்விடம் நாம் நலவை வேண்டுவோம்.
இந்த மண்ணுக்கு எமது அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் வந்துள்ளார்கள்.அது வரவேற்புக்குரியது. மன்னார் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் அளப்பறியது.
உலமாக்களின் உருவாக்கம் காலத்தின் முக்கியத்துவமிக்கதாகும். எமது சமூகத்திற்கு இவ்வாறான உலமாக்களின் உருவாக்கம் இன்றியமையாதது” என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.