தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை பொதுப் பிரச்சினை. அது தொடர்பில் மூன்று அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிவாசலை இடமாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு ள்ளதாக வெளியான செய்தி குறித்து ஆச்சரியமடை ந்ததோடு இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் உறுதியாய் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,
தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை தனிப்பட்ட பிரச்சினையல்ல. அது பொதுவான ஒரு சமூகத்தின் பிரச்சினையாகும். எனவே, இது தொடர்பில் அங்கு வாழும் முஸ்லிம்களின் விருப்புகளுக்கு அமையவே தீர்மானம் எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து எவருக்கும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அதற்கு இடமளிக்க மாட்டோம். கடந்த வருடம் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாக்கப்பட்டது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
பின்னர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் பெளத்த, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் இரண்டு மதங்களைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி மூன்று மாத காலத்தினுள் பழைய பள்ளிவாசலை புனரமைக்கவும் அருகிலுள்ள காணிகளைப் பெற்று 6 பேர்ச் காணிக்குள் பள்ளிவாசலை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அன்று வழங்கப்பட்ட வாக்குறுதியும் தீர்மானமும் காற்றில் பறக்கவிடப்பட்டன.
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு தெரியாமல் குழுவொன்று இரகசியமாக பேச்சுக்களை நடத்தி முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
எனவே, அவசரப்பட்டு எடுக்கும் முடிவினால் தம்புள்ள பள்ளிவாசலுக்கு மட்டுமல்ல, ஏனைய பாதுகாப்புக்கும் ஆபத்தானதாக அமையும். எனவே, நிலைமைகளை உணர்ந்து செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் ன்றும் அமைச்சர் தெரிவித்தார். (தினகரன் 06-06-2014