அஸ்ரப் ஏ சமத்
அரச தொலைக்காட்சி விருது 2015 வழங்கும் நிகழ்வு நேற்று இரவு காலச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்தமித்த எக்கநாயக்க தலைமையில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வை அரச கலாச்சாரத் திணைக்களம் இவ்வருட விருது வழங்கள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டில் உள்ள 10 தொலைக்காட்சிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரம்ஙகள், சிறந்த நடிகை, நடிகர், சிறந்த நிகழ்ச்சிகள் சிறந்த செய்தி வாசிப்பவர்கள். சிறுவர் நிகழ்ச்சிகள் என பலவேறு விருதுகள் வழங்கப்பட்டன. கூடுதலான விருதுகளை இம்முறை இலங்கை ருபாவாஹினி பெற்று முதலிடத்தை வகிக்கின்றது.
தமிழ் மொழி முலம் இம்முறை நேத்தரா அலைவரிசை பெற்றுள்ளது.
இங்கு தமிழ் மொழி முலம் நேத்ரா தொலைக்காட்சி 6 விருதுகள், வசந்தம் தொலைக்காட்சி 5 விருதுகள், சக்தி தொலைக்காட்சி 2 விருதுகள், வர்ணம் தொலைக்காட்சி 2 விருதுகள் கிடைக்கப்பெற்றன.
இந் நிகழ்வில் அமைச்சர் திகாம்பரமும் கலந்து சிறப்பித்தார். சிறந்த ஆங்கில செய்தி வாசிப்பாளர் விருது மொயினா போன்சோ
வசந்தம் தொலைக்காட்சி 5 விருதுகள்
சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளர் விருது ஏ.எல். இர்பான், சிறந்த மஞ்சரி நிகழ்ச்சியில் தூவாணம், நிகழ்ச்சி தயாரிப்பாளர் கவிஞர் பொத்துவில் அஸ்மின், சிறந்த விளையாட்டு, மற்றும் ஆவணப்படம் ஆகிய இரண்டு விருதுகள் இர்பாண் மொஹமட், சிறந்த பாடல் புண்னிய முhத்தி. ஆகியன வசந்தம் தொலைக்காட்சி பெற்றுக் கொண்டது.
நேத்ரா தொலைக்காட்சி 6 விருதுகள்– நித்தியானந்தன், தமிழ் நாடகம் -மாபாஹிர் மொளலானா, சிறந்த தொலைக்காடசி பில்லர் -சோகம் நிகழ்ச்சி – அசரியா பேகம், சிறந்த தொலைக்காட்சி நேர்காணல் – எஸ் கோனேஸ்வரன், சிறந்த கல்வி கலை நிகழ்ச்சி – பி.நித்தியானந்தன்,
சக்தி தொலைக்காட்சி 2 விருதுகள் – சிறந்த பாடல் நிகழ்ச்சி – சியாஉல் ஹசன்
சிறந்த செய்தி காட்சிப்படுத்தல் – மயூரன்
வாணம் தொலைக்காட்சி (2) விருதுகள் – சிறந்த மத நிகழ்ச்சி – எ பிரியதர்சனி,
சிறந்த தொலைக்காட்சி உரை – என் ஹிசாம் மொஹமட்