Breaking
Mon. Nov 25th, 2024

2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சுமார் 5500 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இனிமேலும் இவ்வாறான நடவடிக்ககைளில் வர்த்தகர்கள் ஈடுபட கூடாது எனவும் அமைச்சர் றிஷாத் எச்சரித்துள்ளார்.
நேற்று (08) காலை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் அதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியதாவது: விலைமாற்றுதல் காலாவதியான பொருட்களின திகதியை மாற்றிவிற்றல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு வர்த்தகர்களுக்கு நாம் கடுமையாக எச்சரிக்கின்றோம்.

இதேவேளை வருகின்ற புதுவருடத்தை முன்னிட்டு; நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதில் இருந்து தவிர்க்கப்படுவதற்கு பாதுகாப்பு அதிகார சபையினர் தீவிரமாக தமது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நுகர்வோருக்கு சிறந்த ஒரு வணிக அனுபவத்தை புதுவருட காலத்தில் பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களின் தலைமையிலான புதிய அரசு அதிக அக்கரை செலுத்து வருகிறது.நாடு பூராவுள்ள அனைத்து களஞ்சியசாலைகளக்கும் தேவையான பொருட்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்ட்டுவிட்டது.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களின் தலைமையிலான புதிய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினூடாக சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட 13 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டமை; யாவரும் அறிந்த விடயமே.
நுகர்வோர் அதிகாரசபையானது நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் ஓர் உயர் அரச அமைப்பு ஆகும்.
இச்சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட குழுவினர் சதொச நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டனர்

Related Post