Breaking
Mon. Nov 25th, 2024

இலங்­கையில் தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் எனவும் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதத்தைப் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளமை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது எனவும் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர் வெய­வர சீல­ரத்ன தேரர் இவ் அனு­ம­தியை வழங்­கிய தேசிய நிறை­வேற்­றுச்­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக புத்­தாண்டின் பின்பு வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கூறினார்.

நேற்­றுக்­காலை தெஹி­வளை பெளத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலே அவர் மேற்­கண்ட கருத்­தினை வெளி­யிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் உலகில் எல்லா நாடு­க­ளிலும் அந்­நாட்டின் தேசிய மொழி­யி­லேயே தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் பல மொழிகள் பேசும் மக்கள் இருந்­தாலும் அங்கு ஒரு மொழி­யிலே தேசிய கீதம் பாடப்­ப­டு­கி­றது. தமிழ் நாட்டில் 6 கோடி மக்கள் இருந்தும் அங்கு தமிழ் மொழியில் தேசி­ய­கீதம் பாடு­வ­தற்கு உரிமை கோரப்­ப­ட­வில்லை.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் படி தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தை கொண்டு வர வேண்­டு­மென்றால் அதற்கு 2/3 பெரும்­பான்மை தேவை . தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் என்­பதை சபா­நா­ய­கரைச் சந்­தித்து விளக்­க­ம­ளித்­துள்ளோம்.

அமைச்சர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வையும் சிங்­கள ராவய அமைப்பு சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது. தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­ப­டு­வதை அனு­ம­திப்­பதா என்­பது தொடர்பில் ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்டால் பெரும்­பான்­மை­யின மக்கள் மத்­தியில் தமிழ் மக்கள் மீது குரோதம் ஏற்­பட கார­ண­மாக அமையும். இதன் மூலம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவு பாதிக்­கப்­படும் எனவே சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே தேசிய கீதம் பாடப்­பட வேண்­டு­மென நாம் வலியுறுத்துகிறோம்.

தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப்பாடுவதற்கு அனுமதி வழங்கியுள்ள தேசிய நிறைவேற்றுச் சபைக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.

Related Post