Breaking
Sun. Dec 22nd, 2024

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம்
ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூபா 100 கோடி வழங்க வேண்டும் எனக்கோரி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்  ராஜித சேனாரத்தின தனது சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ்
அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்தின சார்பாக அவரது சட்டத்தரணி சனத்வீரரத்தின இந்த நோட்டீஸை கலகொட அத்த ஞானசார தேரருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சட்டத்தரணி ஊடான நோட்டீஸில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 5 ஆம் திகதி கலகொட அத்த ஞானசார தேரர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்ராஜித சேனாரத்தினவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும்
நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளியிட்டார்.

இதனால் எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளசட்டத்தரணி சரத் வீரரத்தின எனவே இதற்கு நஷ்ட ஈடாக இரண்டு வாரங்களுக்குள் ரூபா 100 கோடி
செலுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு நஷ்ட ஈடு செலுத்தப்படாவிட்டால் அத் தொகையைபெற்றுக்கொள்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Post