ஒரு சமூகத்தின் விடுதலைக்காக வருகின்ற சவால்களை எதிர் கொண்டு அந்த சமூகத்தை பாதுகாக்கவே எமக்கு அரசியல் என்கின்ற கவசமே ஒழிய இந்த அரசியலை வைத்து எவரும் தனிப்பட்ட லாபங்களை அடைவதற்கு முயற்சித்தால் அது மக்களினால் தோற்கடிக்கப்படும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் வவுனியா பட்டானிச்சூர் வெங்கடேஷ்வரா மஹாலில் இடம் பெற்றது.
வவுனியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும்,அமைச்சரின் இணைப்பாளருமான எம்.ஆரிப் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் பரிபாலன சபைகளின் தலைவர்கள்,உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்ட இந்தத கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிஷாத் பதியுதீ்ன் பேசுகையில் –
இன்று சிலசக்திகள் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக மக்களை குழப்ப முற்படுகின்றனர்.பண பலத்தை வைத்துக் கொண்டு இந்த மக்களை அடிமைப்படுத்தலாம் என்றும் அவர்கள் சிந்திப்பதாகவும், அதற்கான முஸ்தீபுகளிலும் ஈடுபடுவதாக தெரிகின்றது.
பதவிகளையும்,பட்டங்களையும் கொடுப்பது அல்லாஹ் என்பதை மறந்து செயற்பட முடியாது. வவுனியா மாவட்டத்தில் எமது கொண்டு பிணைப்பினை சிலருக்கு பணம் கொடுத்து பிரிக்கமுயற்சிக்கின்றனர்.எமது 15 வருட இந்த அரசியல் வாழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமே அதனை துாய்மையான எண்ணத்துடன் நாம் செய்துவந்துள்ளோம். தொடர்ந்து அந்த பணியினை செய்துவருகின்றோம். பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் எம்மிடம் வந்து பல்வுறு முறைப்பாடுகளை செய்வார்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தி அம்மக்களுக்கு பதிலளிக்க வேண்டியது தான் அரசியல் வாதிகளாகிய எமது கடமை என்று உண்ர்ந்து நாம் செயற்படுகின்றோம்.
இந்த மக்களை வைத்துக்கொண்டு வியாபாரிகள் அரசியல் செய்ய முடியாது. அதன் மூலம் எம்மால் ஒரு போதும் எதிர்கால சாவல்களை சந்திக்க முடியாது, அரசியலையும், வியாபாரத்தையும் கலந்து மக்களை பாதாளத்தில் தள்ளுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. வவுனியா மாவட்ட மக்களின் தேவைகள் என்னிலடங்காதவை. அவற்றை பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிக்கின்றபோது அதற்கு இனவாத சக்திகள் கடும் தாக்குதல்களை நடத்துகின்றனர். அதே போல் சில அரசியல்வாதிகள் தமது வங்குரோத்து நிலையினால் எனக்கு எதிரான பொய்யான விடயங்களை தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பான்மை கடும் போக்கு சக்திகள் எமது மக்களின் முதுகளின் மீது ஏற்றி அரசியல் பிழைப்ப நடத்த முற்பட்டனர். ஒவ்வொரு பெயர்களின் எமது சமூகத்திற்கு எதிராக பல்வேறுப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக செயற்பட முடியாதவர்கள் இன்று எமது அபிவிருத்தி பணிகளை விமர்சித்தும்,மக்களுக்கு பொய்யான கட்டுக்கதைகளை பரப்பிவருகின்றனர்.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கின்ற நான்.இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளேன். தமிழரா? முஸ்லிமா? சிங்களவரா? என்று பார்ப்பதில்லை.எமது மார்க்கம் இஸ்லாம் மனிர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றுதான் சொல்லுகின்றது. கடந்த கால யுத்தம் ஏற்படுத்திய அழிவுகள் இன்று எம்மால் நோக்க முடிகின்றது.
இவ்வாறானதொரு சூழ் நி்லையில் எதிர்கொள்ள உள்ள தேர்தலில் எமது பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.கடந்த பொதுத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று கொள்ளும் நோக்கில் நாம் செயற்பட்டோம். ஆனால், துரதிஷ்டம் அதனை அடைந்துகொள்ள காணப்பட்ட தடைகள் தொடர்பில் நீங்கள் நன்கறிவீர்கள் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.