இலங்கையின் இனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியா கட்டமைப்பு ரீதியாக பொருத்தமில்லாத நாடு என, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் உணர்வு மற்றும் தேர்தல் அதிகாரங்களோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். இனப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை ஜயதிலக்க ஞாபகப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும் இலங்கையை காப்பாற்ற முடியாதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.