மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் அமைந்துள்ள தங்களின் கடைகளுக்கு காப்புறுதிப் பணத்தினை பெறுவதற்காக திருடர்கள் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட மாதிரி கடை உரிமையாளர்களே தங்களின் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய
வந்ததையடுத்து கடை உரிமையாளர்கள் பொலிஸாரிடம் வகையாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
இதனால் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியிலுள்ள இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் முற்றிலும் பொய்யானது என்றும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலையில் உள்ள இரண்டு கடைகளே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கடை உரிமையாளர்கள் தங்களின் கடைகளுக்கான காப்புறுதி பணத்தினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு திருடர்கள் கடைகளை உடைத்து கொள்ளையிடப்பட்டது போன்று பொய்யான தகவலை வழங்கி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.