Breaking
Sun. Nov 24th, 2024

-கல்முனை சமீம்-

நாட்டில் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற நம்பிக்கையில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நடவடிக்கைகளை விரிவுபடு;த்துவதிலும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் கூடிய கரிசணை காட்டி வருகின்றன. இந்நிலையானது கிழக்கில் சற்று சூடு பிடித்துள்ளது.

இம் மாகாணத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தற்போதிருந்து தங்களது கட்சிகளின் தொகுதி மற்றும் மாவட்ட, பிரதேச மத்திய குழுக்களை பலப்படுத்துவதிலும், புதிய நிர்வாகிகளை தெரிவதிலும், கரிசனை காட்டி வருவதுடன் பிரதேசங்களில் செல்வாக்கு மிக்க புள்ளிகளை தங்களது கட்சிகளில் சேர்த்து கொள்வதற்காண நடவடிக்கைகளையும் முன் எடுத்து வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தினை பொருத்த வகையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாறியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸிக்கு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அந்நிலையானது அம்மாவட்டத்தில் பொது தேர்தலில் மிகவும் செல்வாக்கு செலுத்த கூடிய ஒரு ஏற்றமாகும்.

ஜனாதிபதி தேர்தலின் பி;னனர் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து மக்களை சந்தித்து தனது நன்றிகளை தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்ரஸின்; தேசிய தலைவர் றிஸாத் பதியுதீனுக்கு இம் மாவட் மக்கள் வழங்கிய வர வேற்பானது. அவர் மீது அம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினையும் நன் மதிப்பினையும் பறை சாட்றியுள்ளது.

இம் மாவட்டத்தில் கல்முனை மா நகர சபையில் மாத்திரம் ஒரு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள மக்கள் காங்கிரஸ் ஆனது மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பெருன்பான்மை உள்ளுராட்சி மன்;றங்களான பொத்துவில், அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை போன்ற உள்ளுராட்சி மண்றங்களில் கூட உறுப்பினர்களை வென்றடுக்கக்கூடிய மக்கள் செல்வாக்கினை பெற்றுள்ளது.

மக்கள் காங்கிரசிற்கு அம்பாறை மாவட்டத்தில் நிலவுகின்ற வசந்த காலத்தினை அக்கட்சியில் தலைமை மிக சரியாக பயன்படுத்தி இந்த ஆதரவுத் தளத்தினை பெறும் மக்கள் சக்தியாக மாற்றி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தினை வென்றெடுப்பதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் தனித்து நின்று குதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் மிகவும் எளிதாக ஒரு பாராளுமன்ற ஆசனத்தினை வென்றெடுக்கும் ஆற்றலை பெற்றுள்ள ஒரு கட்சியாக அதாஉள்ளாவின் தேசிய காங்கிரஸ் உள்ளது.

.
இவ்வாறான ஒரு நிலையிலயே அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ளது.தனித்து போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தினை பெறுவதற்கு தேவையான ஆகக் குறைந்த வாக்கு சுமார் 22 ஆயிரமாகும்

மிகவும் விட்டுக் கொடுப்புடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் விரிவான வேலைத்திட்டங்களுடனும் பிரதேசம் பூராகவும் பலம் மிக்க 10 வேட்பாளர்களை நிறுத்துவதுடன் சிறப்பான வீயூகத்தினையும் அமைத்தால் ரிஷாத் அணியினறுக்கும் ஒரு ஆசனம் என்பது மிக எளிதான ஒரு இலக்காகும்.

இவ்வாறுதான் 2000ஆம் ஆண்டு E.P.D.P  யின் குணசேகரும் சங்கர் முயல் சின்னத்தில் 20 ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு ஆசனத்தினை வென்று தனது பலத்தினை நிரூபித்திருந்தார்;. இத் தனிக்கட்சி வாக்கானது 20 ஆயிரத்துக்கு குறைந்து விடும் போது ஆசனத்தை பெற முடியாத ஒரு துர்பாக்கிய நிலையும் தோன்றலாம்.

இவ்வாறு தான் சங்கர் போல் நாமும் பெறுவோம் என 2001ல் சம்மாந்துறை நௌசாத்தும்; நிந்தவூர் பைசால் காசீமும் ஒரு முயற்சி செய்து 15 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றும் தோல்வியுற்றனர். எனவே இத் தனிக்கட்சிப் போட்டியானது சற்று கடினமான கூர் வாளில் நடப்பது போன்ற ஒரு பலப் பரி;ட்சைதான்.

இந்நிலையானது சில நேரம் வாக்குகளை செல்லாக் காசுகளாக்கி விடக்கூடும் என்பதனாலேயே அதாஉல்லா ஐ.ம.சு முன்னணியுடன் இணைந்து 03 ஆசனங்களை வென்றெடுப்பதற்காக போட்டியிட்டார். இவ்வாறு ஆசனங்களை வென்றெடுக்கும் அளவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்தாவிட்டாலும் ஏதாவது ஒரு பெரும்பான்மை கட்சியுடன் இணைந்து தங்களது வேட்பாளர்களை களமிறக்குவதன் மூலம் தனது வேட்பாளரை வென்றெடுக்க முயற்சிக்கலாம்.

அல்லது இவ்வாக்குகளை ஐ.தே.கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கி அதன் மூலம் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தினை வென்றெடுக்கவும் முடியும்.இது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை கையாளவுள்ள தேர்தல் வியூகத்தின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. எதுவான போதிலும் அம்பாறை மாவட்டத்தில் இன்று உள்ள அரசியல் கள நிலவரத்தினை சரியாக ஆய்வு செய்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் பெரும்பான்மை கட்சியே மாவட்டத்தினை வென்று மூண்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை வெல்லும். ஆக மாவட்டத்தின் மூண்று ஆசனத்துக்கான வெற்றியினை றிசாத் அணியினரே தீர்மானிப்பார்கள் என்பது உறுதி.

Related Post