Breaking
Thu. Oct 31st, 2024

மாயவரத்தான் கி ரமேஷ்குமார்

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பிவிட்டார்கள்.

தற்போது கோடை விடுமுறைக்காக லண்டன் செல்ல எண்ணி, இலங்கை வழியாக பயணம் செய்திருக்கிறார்கள்.
திருச்சி விமான நிலையத்தில் பிரச்னை இல்லை.ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் அவரது இரண்டாவது மகளின் பாஸ்போர்ட்டினைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதில் புகைப்படத்தில் கன்னத்தில் வைத்திருந்த திருஷ்டிப் பொட்டினை மச்சம் என்று கருதி, அந்த மச்சம் இப்போது இல்லை. எனவே புகைப்படத்தில் இருக்கும் குழந்தையும், இங்கே இருப்பதும் ஒன்றல்ல என்று கூறி லண்டன் செல்ல விமானமேற மறுத்து விட்டார்களாம்.

இது குறித்து அங்கிருந்தே சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இதில் நாங்கள் செய்ய எதுவும் இல்லை. மீண்டும் சென்னை வந்து விட்டு இங்கிருந்து லண்டன் செல்லும் நேரடி விமானத்தில் செல்லுங்கள். அதுவும் இங்கு விமான நிலையத்தில் அனுமதிக்க வேண்டும். அதே போல லண்டனிலும் உள் நுழைய அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்கள்.
ஆகவே, பாஸ்போர்ட்டிற்கான புகைப்படங்கள் எடுக்கும் போது உஷாராக இருக்கவும்

Related Post