ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஐநா போதை பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு காரியால பிரதானி யூரி பெடட்டோவுக்கும் நீதிமன்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இந்து சமுத்திரத்தை கேந்திரமாக கொண்டு உலக நாடுகளுக்கு போதைப் பொருள் விநியோகப்படுத்தை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
ஐநாவின் போதை பொருள் தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு சபையின் 13ஆவது உயர் மட்ட குழுக்கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.