Breaking
Thu. Oct 31st, 2024

தென்மேற்கு நைஜீரியாவில் அண்மைக் காலமாக ஓர் மர்ம வியாதி தாக்கி வருவதாகவும் இதனால் 18 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் இதன் காரணத்தை அறிய முடியாது சுகாதார அதிகாரிகள் திகைத்துப் போய் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வியாதியில் சம்பந்தப் பட்டு இறந்தவர்கள் அனைவவும் ஏப்பிரல் 13 ஆம் திகதி முதல் நைஜீரியாவின் ஒன்டோ மாநிலத்திலேயே பாதிக்கப் பட்டவர்கள் என ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எபோலா போன்று அதிகபட்ச அச்சுறுத்தலுடன் மிக வேகமாக இந்த நோய் பரவி வருவது போன்ற அறிகுறிகள் தென்படவில்லை என அறிவித்துள்ள ஒன்டோ மாநில சுகாதார கமிசனர் டாக்டர் டாயோ அடேயான்ஜு கொல்லப் பட்ட 18 பேரைத் தவிர இம்மர்ம நோயால் பாதிக்கப் பட்ட 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் 25 தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்குத் தலைவலி, மங்கலான பார்வை, பார்வை பறி போதல் போன்ற அறிகுறிகள் தென்படும் எனவும் அடேயான்ஜூ குறிப்பிடுள்ளார்.

இந்நிலையில் குறித்த நோய்க்குக் காரணம் தரக்குறைவாக சூடாக்கப் பட்ட அல்கொஹோலை சம்பந்தப் பட்டவர்கள் குடித்ததால் இருக்கலாம் எனவும் சிலர் சந்தேகப் படுகின்றனர். தற்போது இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களின் இரத்தம், சிறுநீர் என்பவை லாகோஸில் உல்ல பல்கலைக் கழகத்தில் பரிசோதிக்கப் பட்டு குணப் படுத்தும் மருந்து தயாரிக்கும் பணி மேற்கொள்ளப் படவுள்ளது. மேலும் நைஜீரிய மருத்துவர்கள் வைத்தியசாலையில் பலியான நோயாளிகளின் சடலங்களில் இருந்து டாக்ஸிகோலொஜிக்கல் (toxicological) பரிசோதனையும் மேற்கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post