Breaking
Sun. Nov 24th, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்படவுள்ள விசாரணையை மீளப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்று இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை மீளப் பெறும் வரை நாடாளுமன்றத்தை விட்டு செல்லப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை நாடாளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்று மீண்டும் நாடாளுமன்றம் ஆரம்பிக்கும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ரோகித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அளுத்மையை பொது பலசேனாவின் சூழ்ச்சியின் மூலம் தாக்கும்போது வீடுகளிலும் 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் இருந்த சிலர் இப்போது மஹிந்தவை காப்பாற்ற நாடாளும்ற போராட்டமா எனவும், சரத் பொன்சேகாவை ஜெயிலில் அடைக்கும் போது இவர்களின் போராட்டம் எங்கு சென்றது என பொது மக்கள் பரவலாக பேசிக் கொள்கின்றனர்.

107966_11169630_908800185810125_2158032245362223003_o 107966_11149726_908807309142746_409063881135687865_o 107966_11134116_908799935810150_8892567997870425354_o 107966_11130508_908800132476797_7514817752868848163_o 107966_11110890_908800122476798_3209948880679744736_o 107966_10838040_908800089143468_857385844164838372_o 107966_10661664_908800012476809_9075481272425672233_o 107966_10373838_908800182476792_3842073177731034932_n 107966_1795410_908800049143472_1717495484392150789_o 107966_1519638_908800212476789_401440133019487236_o

Related Post