கொடுத்தவைகளுக்கும் – இனி
கொடுக்கப்போகும் அருளுக்கும்;
முட்டிக்கொண்டு..
கண்ணீர் தளும்புகிறது;
செவிகளின் சோணைகள்
சிலிர்த்தப்படி – கை ரோமங்கள்
கண்ணீரில் நனைத்து;
மேற்கொண்டுப் பேசமுடியாமல்
துடிக்கிறது என் உதடு!
நன்றிக்கெட்டவனாக
நாளும் நடைப்போடுகிறேன்;
முடித்த அமல்களில் எனக்கு நானே
மனம் திருப்திக்கொள்கிறேன்;
புன்னகைப் பூக்கவேண்டிய
சகோதரத்தின் சதைகளைக் கடித்து;
இரத்தக் கறையுடன் என் பற்களில்
பளிச்சிட்டப்படி இரட்டை
முகத்துடன் உலாவருகிறேன்..
பாவமென்று அறிந்தும் என்
பாதங்களை அதில் நுழைக்கிறேன்;
தனிமையின் சூழலில் நல்லவனெனும்
பகட்டு ஆடையை கழட்டி எறிந்துவிட்டு
அகோரமாய் ஆடி அலைகிறேன்!
கோபத்தை மிஞ்சிய
உன் அன்பில் எனை
ஆரத்தழுவிக்கொள் அர்ரஹ்மானே;
தண்டிக்கும் குணத்தை
மிஞ்சிய உன் கருணையைக் கொண்டு
அருள்மழை பொழிவாய் வல்லோனே;