வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்டகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (22) காலை 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை, மீறாவேடை, கிண்ணயடி, மாஞ்சோலை, கறுவாக்கேணி போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்ததையடுத்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேயின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுனயின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எல்.அமரசிங்க தலையில் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரனைகளின் அடிப்படையிலயே இக் கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து தொலைக்காட்சி பெட்டி, மடி கணணி, சீடி பிளேயர், கையடக்கத் தொலைபேசி, தங்க நகை, சாஜர் டோச் லைட் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்பு பட்ட இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணயடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றயவர் அவர்களின் நண்பர் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எல்.அமரசிங்க தெரிவித்தார்.