அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரான ஜோன் கெரி, இலங்கையில் 100நாட்கள் வேலைத்திட்டதில் நடைமுறைப்படுத்தப்பட்டவை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும், அமெரிக்க ஜனாதிபதியால் கூட இவ்வளவு குறுகிய காலத்தில் அதிகளவான உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
ஜோன் கெரி, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை 100நாட்கள் வேலைத்திட்டம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டபோது ஒரு பக்கத்திலேயே அறிக்கையை எதிர்பார்ததாகவும், ஆனால் 3 பக்கங்களில் அறிக்கை கிடைக்கபெற்றதை அடுத்து ஆச்சர்யம் அடைந்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தபோது கூறியதாக மேலும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.