Breaking
Sun. Nov 24th, 2024

14/15 ஆண்டில் 150,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 7.2 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- இம்முறை பெரும்போகத்தில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நெல் கொள்வனவுக்கான நிதி மாவட்டச் செயலாளர்களினூடாக வழங்கப்படுகின்றன. உத்தரவாத விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.

சுமார் 180 இற்கும் மேற்பட்ட நெற்களஞ்சியசாலைகள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.கீரிசம்பா ஒரு கிலோ 50.00 ரூபாவுக்கும் சம்பா 45.00 ரூபாவுக்கும் நாடு 40.00 ரூபாவும் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post