சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தி அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினராகவே இருக்கலாம் என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
முப்பது வருடக்கால யுத்தத்தின் பின்னர் எமது நாட்டில் மூவின மக்களும் சுதந்திரமாக வாழ்ந்திடும் இத்தருணத்தில் மீண்டும் சில இனவாத சக்திகளை பயன்படுத்தி மீண்டும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள எந்த ஒரு தரப்பினரையும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு சர்ச்சைக்குரிய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வீடமைப்பு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.