உலக ஊடகங்களால் தீவிரவாத நாடாகவே காட்டப்பட்ட பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகின் எந்த நாட்டு ஊடகங்களும் காட்டியதில்லை.
இந்துக்களை 81 சதவீதம் கொண்ட நாடான நேபாளிலும், இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடான பாகிஸ்தான், இந்தியாவின் துயரத்திலும், நேபாளின் துயரத்திலும் பங்கெடுத்துக்கொண்டு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளாகிய நேபாள் நாட்டிற்கு உணவு பொருட்களை விமானம் மூலம் ஏற்றி அனுப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
ஜாதியை கடந்து, மதத்தை கடந்து, மொழியை கடந்து, இனத்தை கடந்து, தேசத்தை கடந்து வந்துள்ள மனிதநேயமே இஸ்லாம் காட்டி தந்த வாழ்வியல் நெறியாகும்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று இன்று தனி தனியாக இருந்தாலும் ஒருக்காலத்தில் ஒன்றாக இருந்த இரத்தப்பாசம் இல்லாமல் போய்விடுமா ?