அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போலி மருத்துவர்களை கண்டறியும் குழுவின் தலைவர் மருத்துவர் ஹரித அளுத்கே இது தொடர்பாக தெரிவிக்கையில்,
மருத்துவச் சபை, ஆயுர்வேத மருத்துவ கட்டளைச் சட்டம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யாத எவருக்கும் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
நாட்டில் சகல பிரதேசங்களிலும் தனியார் மருத்துவ சேவைகளில் ஈடுபடும் நபர்களில் 26.4 வீதமானவர்கள் போலி மருத்துவர்கள் எனவும் அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவான போலி மருத்துவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே உள்ளனர். அங்கு 35 வீதமான மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.