அப்துல் மஜீது என்ற சகோதரரின் ஆட்டோவில் ஒருவர் தம்முடைய கைப்பையை தவறவிட்டு சென்று விட்டார்.
கைப்பையை கண்ட அப்துல் மஜீது அதை பிரித்து பார்த்த போது இரண்டு பவுன் தங்க நகையும், ஒரு டேப், ஒரு செல்போன், ஆதார் மற்றும் குடும்ப அட்டை இருந்துள்ளது.
அப்படியே கொண்டு சென்று சந்திரயான் காவல்நிலைய ஆய்வாளர் ராமாராவ் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை வரவழைத்து பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ராமாராவ் அப்துல் மஜீது அவர்களுக்கு ரூ.1000 அன்பளிப்பாக வழங்கி பாராட்டியுள்ளார்.
எங்கே திருடலாம், யாரை கடத்தலாம், யாரை கொல்லலாம் என்று அலையும் இவ்வுலகில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துள்ள அப்துல் மஜீது அவர்களின் செயல் போற்றுதலுக்கு உரியதாகும்.
அவருக்கு இறைவன் மறுமையில் மகத்தான கூலியை வழங்குவானாக….
இது தான் இஸ்லாம்….!!