–துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
19ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்படுகின்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்னுமொரு தடவை ஜனாதிபதித் தேர்தலிற்கு போட்டி இட முடியாது போவதுடன் நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்கும் நோக்கில் ஜனாதிபதி மீது கேள்வி எழுப்பலாம் என்ற நிலை கொண்டுவரப்படுவதன் காரணமாக இலங்கை ஜனாதிபதி மீது குற்றச் சாட்டுகளை முன் வைத்து நீதி மன்றம் செல்ல முடியுமாக இருக்கும்.
இவ் இரு காரணிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் சவாலானதும்,ஆபத்தானதாகவும் இருப்பதால்,
இவ் சீர்திருத்தத்திற்கு மஹிந்த அணி ஆதரிக்குமா என்ற வினாவினைத் தோற்றுவித்தாலும்.
நிறைவேறினால் மஹிந்த ராஜபக்ஸவினால் இனி ஜனாதிபதியாக வர முடியாது போவதால் அவருடைய சாம்ராஜ்ஜியதுடன் இதனுடன் அழிந்து செல்லவே வாய்ப்புள்ளது.