கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அப்போதய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயளாலர் திஸ்ஸ அத்தநாயக்க மஹிந்த அரசில் இணைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருந்தார்.
அப்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் கபீர் ஹசீம் அவர்களை ரனில் கட்சி பொது செயளாலராக நியமித்திருந்தார்.இதற்காக அவர் எவரிடமும் அனுமதியையோ அலோசனையோ கேட்கவில்லை இவ்விடயம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்து .
பலம் பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயளாலர் பதவிக்கு கபீர் ஹசீமை தான் நியமித்தமை தொடர்பாக ரனில் அக்கட்சி முக்கியஸ்தர்களுக்கு வழங்கிய விளக்கம் ….
” மஹிந்த வாங்கியுள்ளது எமது கட்சி பொது செயளாலரை தற்போது நான் ஒருவருரை அந்த பதவிக்கு நியமித்தால் அவரையும் மஹிந்த அவர் பக்கம் இழுக்க முயற்சி செய்வார். இந்த பதவிக்கு நான் நியமித்திருப்பவரை ஆயிரம் கோடி கொடுத்தாளும் மஹிந்தவால் அவர் பக்கம் இழுக்க முடியாது. அது தவிர அவர் ஒரு முஸ்லீம் இன்று பூரா முஸ்லிம்ளும் மஹிந்தவுக்கு எதிராக நிற்கின்றனர் கபீர் ஒரு நாளும் அவரது சமூகத்துக்கும் அவரின் கட்சிக்கும் துரோகம் செய்யமாட்டார் நான் அவரை பூரனமாக நம்புகின்றேன்.””
இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் கபீர் ஹஸீம் எமது கட்சி தலைவர் என்னை கவுரவப்படுத்தியதின் மூலம் இலங்கை முஸ்லிம்களை கவுரவித்தவராகிவிட்டார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்…