Breaking
Sat. Nov 23rd, 2024

அம்­பாந்­தோட்டை, அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவை நெருங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் மெய்ப்பாது­கா­வலர் என கூறப்­படும் இரா­ணுவ கொமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீரர் தொடர்பில் விரி­வான விசா­ரணை ஒன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த விசா­ர­ணை­களில் குறித்த இரா­ணுவ கொமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீர­ரிடம் தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் குறிப்­பிட்டார்.

அத்­துடன் மேல­திக விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசேட குழு­வொன்­றூ­டாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் குறித்த சம்­பவம் குறித்தும் அந்த வீரர் நாமல் ராஜ­ப­க் ஷவின் மெய்­பா­து­கா­வலர் தானா என்­பதை உறுதி செய்­து­கொள்ளும் பொருட்டும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க் ஷ­விடம் விசா­ரணை நடத்தி வாக்குமூலம் ஒன்றை பெறு­வது குறித்து புல­னாய்வுப் பிரி­வினர் அவ­தனம் செலுத்­தி­யுள்­ளனர்.

நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு இரா­ணுவ கொமாண்டோ பாது­காப்பு படை வீரர் எப்­படி பாது­காப்­ப­ளித்தார், அவர் ஏன் ஜனா­தி­ப­தியை நெருங்­கினார், ஜனா­தி­ப­தியின் பாது­காப்பில் குறை­பா­டுகள் இருந்­ததா? போன்ற பல்­வேறு கோணங்­களில் தொடர் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர குறிப்­பிட்டார்.
கடந்த 25 ஆம் திகதி சனிக்­கி­ழமை அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ கோட்­டையில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் கூட்டம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இந்த கூட்­டத்­துக்கு ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறிசேன தலைமை தாங்­கி­யுள்ளார். இதன் போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் அங்கு சென்­றி­ருந்த நிலையில் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க் ஷவின் பாது­கா­வ­ல­ரான இர­ணுவ ெகாமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீரர் ஆயு­தத்­துடன் பிர­வே­சிக்க முடி­யாத பகு­திக்குள் தனது கைத் துப்­பாக்­கியுடன் நுழைந்­துள்ளார்.
நாமல் ராஜ­பக் ஷவின் மெய்ப் பாது­கா­வ­லரை கண்­டிப்­பாக ஜனா­தி­பதி பாது­காப்பு பிரி­வினர் சோதனை செய்­தி­ருக்க வேண்டும் என்ற நிலையில் அவர் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யி­லேயே முன்­னே­றி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது.
இந் நிலையில் அந்த கோப்ரல் தர அதி­காரி ஜனா­தி­ப­தியை நெருங்­கிய போது அங்கு பாது­காப்பு கட­மையில் இருந்த பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை வீரர் ஒருவர் விட­யத்தை உணர்ந்து அவரை உட­ன­டி­யாக சோதனை செய்­துள்­ள­துடன் அந்த பிர­தே­சத்தில் இருந்து அவரை அப்­பு­றப்­ப­டுத்­தவும் நடவ­டிக்கை எடுத்­துள்ளார்.
ஜனா­தி­பதி கலந்­து­கொள்ளும் நிகழ்­வொன்றின் பாது­காப்பு விட­யங்­களை ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவே கவ­னித்து வரும் நிலையில் குறித்த கூட்­டத்தில் அந்த பாது­காப்பு விட­யங்­களில் குறை­பா­டுகள் காணப்­பட்­ட­தாக பலரும் குற்றம் சுமத்­தினர்.
இந் நிலை­யி­லேயே இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபர் நேர­டி­யாக அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­துடன் விசா­ர­ணை­களை உட­ன­டி­யா­கவே குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் கைய­ளித்­துள்ளார். குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இந்த விடயம் குறித்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பாது­காப்­பிற்­காக பொலி­ஸாரே கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். எனினும், எவ்­வாறு நாமல் ராஜ­பக் ஷ மட்டும் இரா­ணுவக் கொமாண்டோ படைப்­பி­ரிவின் கோப்­ரலை பாது­காப்பு பிரிவில் இணைத்துக் கொண்­டுள்ளார் என்­பது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விசேட வேண்­டுகோள் விடுக்­கப்­பட்டால் மட்­டுமே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு இரா­ணுவ கொமாண்ேடா படை­யணி வீரர்­களின் பாது­காப்பை பெற்­றுக்­கொள்ள முடியும்.
நாமலின் சார­தி­யா­கவும் இரா­ணுவ படை­வீரர் ஒரு­வரே கட­மை­யாற்றி வரு­கின்றார் என்­பது விசா­ர­ணை­களில் வெளி­வந்­துள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.
இந் நிலையிலேயே அங்குணகொல பெலஸ்ஸவில் வைத்து குறித்த இராணுவ கோப்ரல் அந்த சந்தர்ப்பத்திலேயே ஜனா திபதி பாதுகாப்புப் பிரிவினால் விடுதலை செய்யப்பட்டமை குறித்தும் அதனுடன் சம்பந் தப்பட்ட ஏனைய விவகாரங்கள் குறித் தும் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு ஆராய்கின்றது. இது தொடர்பாக நாமல் ராஜபக் ஷவிடம் விசரித்து குற்றப்புலனாய் வுப் பிரிவு வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டினர். (VK)

Related Post