Breaking
Sat. Nov 23rd, 2024

அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார்

திட்டமிட்டுள்ளனர்.

லோம்பார்கினி கார்களை அடுத்து ‘ஃபெராரி’ கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின்

அதிநவீன விலை உயர்ந்த கார்களான ‘ஆஸ்டன் மார்ட்டின்’, ‘பெண்ட்லி’, ‘மெர்செடெஸ்’ ஆகிய சொகுசு கார்களையும் வாங்கி

ரோந்து பணியில் இணைத்தனர்.

‘போர்ஸ்சே பனமெரா எஸ்.இ.-ஹைப்ரிட் கார்களும் இந்த அலங்கார அணிவகுப்பு வரிசையில் சமீபத்தில் இணைக்கப்பட்டது.

இந்த அதிநவீன சொகுசு கார்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் 5.2 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப்

பிடிக்கும்.

இந்த வேகத்தில் போனால் சாலைகளை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை விரட்டிச் சென்று பிடிக்க

முடியாது என கருதிய துபாய் போலீசார், மணிக்கு 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாயக்கூடிய ‘புகாட்டி

வெய்ரான்’ ரக கார்களை தற்போது தங்களது போலீஸ் ரோந்துக் கார்களின் அணிவரிசையில் புதிதாக இணைத்துள்ளனர்.

இப்படி போலீஸ் துறையில் பல்வேறு நவீனங்களையும், புதுமைகளையும் செய்துவரும் துபாய் போலீசார் வரும் 2017-ம்

ஆண்டுக்குள் ரோபாகாப்ஸ் என்றழைக்கப்படும் போலீஸ் ரோபோட்களை பயன்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட சாலைகள், ஷாப்பிங் மால்கள் போன்ற பொதுஇடங்களில் இந்த ரோபோகாப்ஸ்களை

பணியில் அமர்த்தி அதன் மூலம் மக்களின் காவல் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோகாப்ஸ்கள்

அனைத்தும் துபாயின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது ஐயங்கள், வினாக்கள், புகார்கள் போன்றவற்றை இந்த ரோபோகாப்ஸ்களின் உடையில்

பொருத்தப்பட்டிருக்கும் மைக்கில் தெரிவித்தால், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள், சூழ்நிலைக்கு ஏற்ப

செயல்படுவார்கள். இது மட்டுமின்றி, இதைப்போன்ற ரோபோகாப்ஸ்களோடு தொடர்பு கொள்வது மக்களுக்கு புதுமையான

அனுபவமாகவும் இருக்கும் என துபாய் போலீசின் ஸ்மார்ட் யூனிட் பிரிவு தலைவரான கர்ணல் காலித் நசீர் அல்ரஸூக்கி

தெரிவித்துள்ளார்.

மனிதர்களின் தலையீடே இல்லாமல் இந்த ரோபோகாப்ஸ்களுடன் தொடர்பு கொள்ளும் 2017-ம் ஆண்டை எதிர்நோக்கி துபாய்

மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Post