அரசியல் யாப்புக்கான 19வது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இறுதி வரையும் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டு மக்கள் பெரிதும் சந்தோஷப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் யாப்பு திருத்தம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதனூடாக ஜனநாயகம் பாதுகாத்துப் பலப்படுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு முக்கியத்துவம் மிக்க 19வது திருத்தத்தைநிறைவேற்ற முடியுமா என முழுநாட்டு மக்களுமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் படி நடவடிக்கைகளை முன்னெடுத்து இத்திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். ஜனாதிபதியினதும், பிரதமரினதும் தூரநோக்கு மற்றும் சாணக்கியத்தின் பயனாகவே இத்திருத் தத்தை நிறைவேற்ற முடிந்தது.
இத்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பல்வேறு விதமான முயற்சிகளையும் சூழ்ச்சிகளையும் முன்னெடுத்தது. இத்திருத்தம் நிறைவேற் றப்படுவதைத் தவிர்த்து ஜனாதிபதியையும், பிரதமரையும் பலகீனமானவர்களாகக் காட்ட முயற்சி செய்தனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதற்குப் புறம்பான கோரிக்கைகளையும் திருத்தங்களையும் அவர்கள் முன்வைத்தனர்.
ஆனால் 19வது திருத்தத்திற்கு 150 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இடைக்கப்பெறும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும் எம்மால் நியாயமற்ற கோரிக்கைகளையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாம் அவர்களுக்குக் கூறினோம். அவர்கள் எதிர்க்கட்சியினராக இருந்த போதிலும் அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தங்களைச் செலுத்தினர். இதற்கு அவர்கள் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதே காரணம்.
அரசாங்கம் நல்லாட்சியையும் ஜனநாய கத்தையும் வலுப்படுத்துவதற்கு மேற்¦ காள்ளும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தவே இக்குழுவினர் முயற்சி செய்தனர். ஆனால் இப்போது 19வது திருத்தம் நிறைவேற்றப்பட நாமே துணை புரிந்தோம் என்று அவர்கள் ஊடக மாநாட்டை நடாத்திக் கூறுகின்றனர்.
ஆனால் நல்லாட்சிக்காகவும். ஜனநாய கத்தைப் பலப்படுத்துவதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவோ, அவருக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவோ மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் இறப்பர் முத்திரைகள் போன்றே செயற்பட்டனர் என்றும் அவர் குறிப் பிட்டார்.