Breaking
Mon. Dec 23rd, 2024

சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சவூதியின் முன்னாள் மன்னர் அப்துல்லாஹ்வின் மரணத்திற்குப் பின் சவுதி அரேபியாவின் புதிய மன்னராக சல்மான் பின் அப்துல் அஜீஸ் (வயது 79), கடந்த ஜனவரி மாதம் முடிசூட்டப்பட்டார்.இவர் பதவியுடன் பட்டத்து இளவரசராக முக்ரின் பின் அப்துல் அஜீஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முக்ரின் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய பட்டத்து இளவரசராக வலிமை வாய்ந்த உள்துறை அமைச்சராக திகழ்ந்து வந்த முகமது பின் நயீப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னர் சல்மானின் சகோதரர் மகன் ஆவார்.
மேலும் மன்னர் சல்மான் மகன் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னர் சல்மான் பதவியேற்றபின். அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு 2 மாதம் கூடுதல் சம்பளத்தை வழங்கும்படி ஆணையிட்டமை குறிப்பிடத்தக்கது

Related Post