Breaking
Mon. Dec 23rd, 2024

கிரேக்க நாட்டில் யானிஸ் வாரவ் பக்கிஸ், நிதி மந்திரி பதவி வகித்து வருகிறார். அவர் தனது மனைவி டேனி மற்றும் நண்பர்களுடன் அங்கு எக்சார்சியா மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அவர்கள் அனைவரும் இரவு விருந்தினை சாப்பிட்டு முடித்தனர்.

அப்போது அங்கு அதிரடியாக புகுந்த இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் கண்ணாடி பொருட்களை வீசி அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிதி மந்திரி யானிஸ், காயம் அடைந்து விடாதபடிக்கு மனைவி டேனி, அவரை கேடயமாக தழுவி பாதுகாத்தார். இதனால் அவர் காயமின்றி தப்பினார். பின்னர் யானிஸ், டேனி தம்பதியர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. மந்திரி யானிஸ், சிக்கன கொள்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்ற வகையில் அனைவராலும் விரும்பப்படுகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post