கைவிரல் ரேகையை மையப்படுத்திய புதிய கடவுச் சீட்டும் இலத்திரனியல் அடையாள அட்டையும் அடுத்து வரும் இரு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க குறிப்பிட்டார்.
இலத்திரனியல் அடையாள அட்டைக்கன வேலைகள் ஏற்கனவே ஆட்பதிவு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கடவுச் சீட்டை அறிமுகம் செய்யும் விதமாக அனைத்து வேலைப்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள கடவுச் சீட்டுக்கள் ஊடாக மோசடிகள் மிக சூட்சுமமாக முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை தடுக்கும் விதமாகவே இந்த புதிய கடவுச் சீட்டுக்கள் வடிவமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய கடவுச் சீட்டில் கைவிரல் ரேகையே பிரதான இடம் வகிக்கும் எனவும் அதனால் விமான நிலையத்தில் தேவையற்ற கால தாமதத்தையும் தவிர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.