கடலுக்கடியில் கூகுள் நிறுவன நெட்வொர்க் கேபிள்களை சுறாக்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது நெட்வொர்க் பயன்பாட்டிற்காக கண்ணாடி இழை கேபிள்களை பசிபிக் கடலுக்கு அடியில் பதித்து உள்ளது.
இந்த கண்ணாடி இழைகள் சூப்பர் கார்டு மெட்டிரியல் மற்றும், புல்லட் புரூப், போன்றவைகளல் உருவாகப்பட்ட பொருட்களால் மிகுந்த பாதுகாப்பாக மூடபட்டு இருக்கும்.
அப்படி இருந்தும் இந்த கண்ணாடி இழை கேபிள்களை சுறாக்கள் கடித்து சேதபடுத்தி உள்ளது. கடலுக்கு அடியில் பொருத்தபட்டு உள்ள கேபிள் இழைகளில் இருந்து சுறாக்களுக்கு மின்காந்த சமிக்ஞைகள் கிடைத்து இருக்காலாம், அதன் மூலம் கவர்ந்து இழுக்கப்பட்ட சுறாக்கள் கேபிளை கடித்து சேதபடுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது