Irshad Rahumathulla
இந்த நாட்டில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த உரிமைகளுக்கு தடைகள் வருகின்ற போது இதனை வெற்றிக் கொள்ள தமது கட்சியின் தொழிற்சங்கம் எல்லா நேரங்களிலும் செயற்படும் என்றும் கூறினார்.
தொழிலாளர் தினத்தையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது –
ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் தொழிலளார்கள்.இந்த தொழிலாளர்களின் கோறிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படாத பல்வேறு சந்தர்ப்பங்களை கானுகின்றோம்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் போராட்டங்கள் இடம் பெறுகின்றன.
உலகில் தொழில் தருநர்கள் தொழிலாளர்களை அடக்க ,ஓடுக்க முற்படும் சந்தர்ப்பங்களை பார்க்கின்றோம்.இந்த சந்தர்பங்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கவென உருவாக்கப்பட்டதே தொழிலாள அமைப்புக்கள்,இந்த அமைப்புக்கள் இன்று மே தினத்தை தமது முக்கிய தினமாக கொண்டாடும் வேளை அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் இந்த பயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துவதுடன்,தொழிலாளர் உரிமையினை வென்றெடுக்க அனைவரும் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.