மகாத்மா காந்திஜியின் 150 வது பிறந்த நாளுக்குள் தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நரேந்திர மோடி, தமது சுதந்திர தின உரையில் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இது காந்தியின் கனவு என்றும் கூறியுள்ளார். காந்திஜியின் 150 வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும்போது இந்தியா தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சில விஷயங்களை வலியுறுத்தி உள்ளது. அதன் படி நாட்டில் திறந்த வெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக புறக்கணிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்விஷயத்தை செய்வதில் குடிநீர் துறை மற்றும் துப்புரவுத் துறை ஆகிய இரண்டு அமைப்புக்களும் விரைந்து செயல்பட வேண்டும். அப்படி சாத்தியமில்லாத பட்சத்தில் இரு அமைப்புகளும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை நாம் தூய்மையான இந்தியா தினமாகக் கொண்டாட முடியும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.