Breaking
Sat. Nov 23rd, 2024

நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன்.

நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்­றி­ணைந்து மிகப்­பெ­ரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நாட்டில் ஜன­நா­யகவாதிகள் இனியும் வாய்­மூடி இருக்­காது சமூ­கத்தின் நல­னுக்­காக
குரல் எழுப்­ப­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று கலைஞர் உபுல் சாந்த
சன்­னஸ்­க­லவின் புத்­தக வெளி­யீட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர்
மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

நான் இன்று ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் எனது முன்­னைய நிலைமை தொடர்பில் நான் இன்னும் மறக்­க­வில்லை. பல­காலம் அமை­தி­யா­கவும் மற்­ற­வர்­களில் கதை­க­ளுக்கு செவி மடுப்­ப­வ­னா­கவும் இருந்தேன்.

எனினும் ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் போராட்­டத்தில் ரணில் விக்­க­ர­ம­சிங்க வுடன் இணைந்து வெற்­றி­பெற்­றுள்ளேன். எமது போராட்­டத்தில் ஜன­நா­ய­கத்தை விரும்பும் பலர் கைகோர்த்­தமை எமக்கு கிடைத்த வெற்­றி­யாகும். நல்ல ஊட­க­வி­ய­லா­ளர்கள், அர­சி­யல்­வா­திகள் என அன்­மைக்­கா­ல­மாக எனக்கு நல்ல நட்பு வட்­டாரம் உரு­வா­கி­யது .

அர­சாங்­கத்தில் இருப்­பதை விடவும் எதிர்க் கட்­சி­யாக இருக்கும் போதே அதி­க­மாக ஊட­கத்­து­டனும், ஜன­நா­ய­க­வா­தி­க­ளு­டனும் பழ­குவோம். அது யதார்த்­த­மான விட­ய­மாகும். ஆனால் இன்று நாட்டின் நிலைமை மாறி­யுள்­ளது

நான் இப்­போதும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டனும் ஜன­நா­ய­க­வா­தி­க­ளு­டனும் நெருக்­க­மா­கவே பழ­கு­கின்றேன்.
நாட்டில் ஜன­நா­யகம் சுயா­தீனம் ஆகி­ய­வற்றை நிலை­நாட்­டு­வதில் ஊட­கத்தின் செயற்­பா­டுகள் மிகவும் அவ­சி­ய­மா­னது.

அந்த தேவை­யினை நாம் இனங்­கண்டு செயற்­ப­டு­கின்றோம் . நாட்டில் இரண்டு மிகப்­பெ­ரிய சிக்­க­லான முடிச்­சுகள் உள்­ளன. ஒன்று சாப்­பாட்டுக் கடையில் கட்­டித்­த­ரப்­படும் “ரசம்” பை முடிச்சி. மற்­றை­யது ஜே .ஆர் . ஜெய­வர்­த­னவின் அர­சியல் அமைப்பு முடிச்சி.

நாம் இரண்­டா­வது முடிச்­சியை மிகவும் இல­கு­வாக அவிழ்த்து விட்டோம். நானும் பிர­தமர் ரணிலும் ஒன்­றி­ணைந்து ஜே. ஆர் ஜெய­வர்த்­த­னவின் அதி­கார குவிப்பு அர­சியல் அமைப்பை இல­கு­வாக மாற்­றி­விட்டோம்.

இதனால் எதிர்­கால அர­சியல் பரம்­பரை ஜன­நா­யக ரீதி­யி­லான வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.

இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்தும் சிறந்த மனி­தர்கள் எதிர்­கா­லத்தில் செயற்­பட வேண்டும் என்­பதையே நாம் எதிர்­பார்­கின்றோம். இத்­தனை காலமும் எமது சமூ­கத்தில் பல நல்ல நபர்கள், சமூக அக்­கறை கொண்ட நபர்கள் இருந்­தாலும் அவர்கள் எதோ ஒரு கார­ண­த்திற்­காக வாய்­மூடி அமை­தி­யாக இருந்­தனர்.

ஆனால் எதிர்­வரும் காலங்கள் ஜனநாயக வாதிகளுக்கானது. அதற்கான சுதந்திர சூழலை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம். எனவே சமூக ஆர்வலர்களின் வாய்கள் இனியும் மூடப்பட்டிருக்கக் கூடாது. நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் அவர்கள் தமது சேவையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related Post