எம்.எஸ்.எம்.ஸப்றாஸ்
தேசிய மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு இரண்டாம் மொழிகற்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள நூறு இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மொழியை ஆறுமாதகாலத்தில் கற்பிக்கும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் அல் – அறபா இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இத்திட்ட அங்குராப்பண நிகழ்வில் நகர சபைத்தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டார்.
இளைஞர் கழகத்தின் செயலாளர் முகம்மது சஜிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்பேளனத் தலைவர் ஏசீஎம் சயீத் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சமாதானக்கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் உள்ளிட்டபலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்புக்களுக்கு எண்பது சதவீதம் சமூகமளித்து பாடநெறியைப் பூர்த்தி செய்பவர்களுக்கு அரசாங்க அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுமென பாடஆசிரியர் முஹமட் மபாஸ் தெரிவித்தார்.
நகர சபையின் தவிசாளர் எம்iஎம் தஸ்லிம் உரையாற்றுகையில் நீங்கள் இரண்டாம் மொழியொன்றை தற்போது கற்பதாக கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தாய் மொழி என்பது தானாகவே தெரிந்து கொண்டதாகும். அந்தவகையில் நாங்கள் இப்போதுதான் முதலாவதாக மொழியொன்றைக் கற்கிறோம் என்றார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சமாதானக்கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் இங்கு உரையாற்றுகையில் மொழியொன்றைக்கற்றுக் கொள்வதற்கு சூழல் மிகவும் முக்கியமானதாகும் என்றார்.