அஸ்ரப் ஏ சமத்
2013ல் அம்பாறையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தியின்போது 3 பஸ் நிலையங்களை அமைப்பதாக சொல்லி முன்பு கடமையில் இருந்த அரசாங்க அதிபர் நில் தி அல்விஸ் கோட்டாப ராஜபக்சவின் தணிப்பட்ட கணக்குக்கு 13 கோடி ருபாவுக்கான காசோலையை வழங்கியிருந்தார்.
மேற்படி விடயமாக அம்பாறை ஜே.வி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் எல்.பி வசந்த பியதிஸ்ச கொழும்பு இலஞ்ச ஆணையாளரிடம் நேற்று முறைப்பாடு செய்தனர்.
இவ் நிதிமோசடி சம்பந்தமாக உடனடியாக கோட்டாபாய ராஜபக்ச, அம்பாறையில் கடமையில் இருந்த அரசாங்க அதிபர் தற்பொழுது மாத்தளை மாவட்டத்தில் அவர் அரச அதிபாராக கடமையாற்றுகின்றார்.
அம்பாறை நகர சபைத் தலைவர் இந்திக்க நளீன் ஜயவிக்கிரம, ஒப்பந்தக்காரர் தனுஜ ரங்கஜீவ ஆகியோறுக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் அம்பாறை ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் வசந்த பியதிஸ்ச ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
“உகன, 30 மில்லியன் தெஹியத்தக் கண்டிய 50 மில்லியன் ருபா, பதியத்தலாவ 50 மிலலியன் ருபா ஆகிய 3 இடங்களில் புதிய பஸ் நிலையம் அமைப்பதாகவே மேற்படி 13கோடி ருபாவுக்கான காசோலைகள் எழுதப்பட்டு அம்பாறை அரசாங்க அதிபர் நகர அபிவிருத்தி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபாயவின் கணக்கு இச் காசோலையை அனுப்பியிருந்தார்.
ஆனால் அங்கு அப்படி ஒரு பஸ்நிலையமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்வில்லை. ஆனால் அரசாங்க அதிபரின் அலுவலக வீடுகள் 45 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கோட்டாபாயவின் மனைவியின் சகோதரியின் கணவரான பிரிகேடியர் (சகலன்) முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர குடியிருந்த அம்பாறை அரச அதிபருக்கான விடுதிகளை 45 இலட்சம் ருபாவுக்கு அதிகமான நிதி செலவலித்து புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் தணிப்பட்ட காணிகள் மண் நிரப்பட்டுள்ளன. அம்பாறை நகர சபைத் தலைவர் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கியுள்ளார். அத்துடன் ஒப்பதக்கார் மில்லியன் கணக்கில் இந் நிதிகளில் முறைகேடாக அரச பணம் கையாடியுள்ளதாகவும்” வசந்த அங்கு தெரிவித்தார்.