எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும்.
எனினும் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. திறைசேரி பிணைப்பத்திர விநியோகம் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன.
எனினும் இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் சிறந்த முகாமைத்துவம் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக நிலைமை ஏற்படவில்லை.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு தற்போது உரிய இடத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஓர் நிலைமை காணப்படவில்லை.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் எதிர்வரும் 2018ம் ஆண்டுக்கான வருடாந்த கூட்டம் இலங்கையில்ந நடைபெறவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் உதவு தொகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.