Breaking
Wed. Oct 23rd, 2024

மஹிந்­தவை பணயம் வைத்து மீண்டும் அர­சி­யலில் குதிக்க ஒரு­சிலர் முயற்­சிக்­கின்­ற னர். ஆனால் மக்கள் ஒரு­போதும் மஹிந்த கூட்­ட­ணியை ஆத­ரிக்க மாட்­டார்கள். மஹிந்­தவின் பிர­தமர் கனவு ஒருபோதும் பலிக்­கப் ­போ­வ­தில்லை என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

மஹிந்­த­வுக்கு குரல்­கொ­டுக்கும் கூட்­ட­ணியே மஹிந்­தவை வீழ்த்­தி­யது என்­பதை அவர் மறந்­து­விடக் கூடாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறு­ம­யவின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கை யில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தனிப்­ப ட்ட செயற்­பா­டுகள் தொடர்பில் எம்மால் எந்தக் கருத்­தி­னையும் தெரி­விக்க முடி­யாது. மஹிந்த ராஜபக் ஷவை கட்­சியில் இணை த்துக் கொள்­வதும் அவரை பிர­தமர் வேட்­பா­ ள­ராக நிறுத்­து­வதும் கட்­சியின் தீர்­மா­னமே. ஆனால் அதையும் தாண்டி மக்­களின் விருப் பம் என்ற ஒன்றும் உள்­ளது. மஹிந்த ராஜபக் ஷவே தலை­வ­ராக வேண்டும் என்று மக் கள் நினைத்­தி­ருந்தால் இன்றும் அவரே ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்பார்.

ஆனால் ஜனாதிபதி தேர்­தலில் அவரை மக்கள் தோற்­க­டித்து ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். மஹிந்­தவின் தோல்­விக்கு அவ­ரது ஆட்­சியில் நடந்த ஊழல் மற்றும் அடக்­கு­மு­றை­களே காரணம் என்று பொது­வாக கூறி­னாலும் அவரை சுற்றி இருந்த கூட்­ட­ணி­யினால் தான் அவர் தோல்­வியை சந்­தித்தார். மஹிந்­தவை பலப்­ப­டுத்­து­வ­தாக கூறிக்­கொண்டு அரா­ஜக செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட மஹிந்த ஆத­ரவு கூட்­டணி இன்று அர­சியல் அனா­தை­யாக மாறி­விட்­டது.

மஹிந்த ராஜபக் ஷவின் செல்­வாக்கில் தான் இவர்கள் இன்றும் அர­சியல் நடத்­து­கின்­றனர். அவர்­க­ளுக்கு மஹிந்த இல்­லாது மக்கள் மத்­தியில் செல்ல முடி­யாத நிலை உள்­ளது. எனவே தமது அர­சி­யலை தக்க வைத்துக் கொள்ள மஹிந்­தவை மீண்டும் அர­சி­யலில் இழுத்­து­விட முயற்சிக்­கின்­ற னர். இவர்­களால் தான் மஹிந்த மீண்டும் அழிவை சந்­திக்கப் போகின்றார் என்­பதை அவர் நினைவில் வைத்­து­க்கொள்ள வேண்டும்.

அதேபோல் மஹிந்­த­வுக்கு மீண்டும் அதி­கார ஆசை வந்­து­விட்­டது. ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது தான் அனு­ப­வித்த சுக­போக வாழ்க்கை மீண்டும் அவ­ருக்கு தேவைப்­ப­டு­ கின்­றது. அதற்­கா­கவே அதி­கார பகிர்வில் இப்­போது பலம் கூடிய நபரின் இடத்தை தன­தாக்­கிக்­கொள்ளும் முயற்­சியில் இறங்­கி­யுள்ளார். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவால் மீண்டும் அதி­கா­ரத்தை கைப்­பற்ற முடி­யாது. அவரால் பிர­தமர் பத­விக்கு வர­மு­டி­யாது. அவர் மனக்­கோட்டை கட்­டு­கின்றார். ஆனால் அவர் காணும் கனவு ஒரு­நாளும் பலிக்­காது. யார் அவரை பிர­த­ம­ராக்க முயற்­சித்­தாலும் மக்கள் அவரை ஒரு­போதும் அதனை விரும்ப மாட்­டார்கள். மக்­க ளின் நம்­பிக்­கையை இழந்த தலைவர் மஹிந்த என்­பதை அவர் நன்கு உணர்ந்து இருப்பார். கடந்த பத்து ஆண்­டு­களில் நாட் டில் நடந்­தவை அனைத்­தை யும் மக்கள் நன்கு உண ர்ந்­துள்­ளனர்.

மேலும் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது தொடர்பில் பலர் கருத்­துக்­களை தெரி­வித்­தாலும் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வரும் வரையில் பாரா­ளு­மன்­றத்தை கலை க்க முடி­யாது. 20ஆவது திருத்தம் இம்­மாத இறு­திக்குள் நிறை­வேற்­றப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். நாம் தேர்தல் திருத்தம் தொடர்பில் கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்தை நடத்­தி­யுள்ளோம். எனவே எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்வில் நாம் தேர் தல் திருத்தம் தொடர்பில் யோசனை ஒன்­றையும் முன்வைக்­க­வுள்ளோம்.

அதற்­க­மைய அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளும் தேர்தல் முறை­மையை கொண்­டு­வ­ரு­வதே எமது நோக்­க­மாகும். சிறு­பான்மை கட்­சிகள் மற் றும் சிறிய கட்­சிகள் அனைத்தும் தேர்தல் முறைமை மாற்­றத்தில் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அதேபோல் ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டில் ஒருசில சந்திப்புகள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அனை த்து கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசிய மானதொன்றாகும். எனவே அனைவரி ன தும் ஆதரவுடன் 20ஆவது திருத்தச் சட்ட த்தை நிறைவேற்ற நாம் முயற்சிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Post