நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய போதுமான நிதி கிடைக்கவில்லை என்று ஐ நா தெரிவித்துள்ளது.
இதுவரை நிவாரண நிதியாக 22 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக நேபாள பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மெக்கோல்ட்ரிக் தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு வாரத்துக்கும் முன்பு நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 415 மில்லியன் டாலர்கள் வேண்டும் என்று ஐ நா கோரியிருந்தது.
நிதி உதவிகள் வேகமாக கிடைத்தால்தான், மலைப் பகுதிகளில் இருக்கும் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று ஐ நா அதிகாரி கூறியுள்ளார்.
நேபாள பூகம்பத்தில் இறந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டிவிட்டது. பல லட்சம் பேர் தமது வீடுகளை இழந்துவிட்டனர். பல பழைய கோயில்கள் இடிந்து போய்விட்டன.